தல அஜித்தின் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லாஸ்லியா……

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3ல் இலங்கையை சேர்ந்த பிரபலமான லாஸ்லியா மிகவும் மக்கள் மனதை கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே லாஸ்லியாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனை தொடர்ந்து அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இறுதி வரை நீடித்த லாஸ்லியா பின்னர் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் ஏராளமான நிகழ்வுகளிலும், விருது விழாக்களிலும் படு பிஸியாக இருக்கின்றார்.

தற்போது லாஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நாயகனான் ஆரியுடன் நடிக்க இருக்கிறார். அவருடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இணைகின்றார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 மூலம் பிரபலமான அபிராமியும் லாஸுடன் இந்த படத்தில் நடிக்க இருப்பது தான் அந்த கூடுதல் தகவல். இதனால் அவர்களின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்க்ளின் உற்சாகத்தை இரட்டிப்பாகும் வகையில் லாஸின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் ஆளுமா டோலுமா பாடலுக்கு அவர் குத்தாட்டம் போட்டு இருக்கின்றார்.