அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்..

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், கடந்த மாதத்தின் 3 ஆம் தேதியன்று ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் நாட்டுடைய இராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டார்.

இந்த விசயத்திற்கு பதிலடியாக ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலின் போது சுமார் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இந்த போர் பதற்றம் தற்போது குறைந்துள்ள நிலையில், சிறிய அளவிலான தவறு இழைத்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடுகல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்து பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட 40 ஆவது நாளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈரான் புரட்சிகர படைத்தளபதி ஹொசைன் சலாமி இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.