பிரித்தானியாவில் முற்றிலும் எதிர்பாராத புதிய கோணத்தில் பரவும் கொரோனா வைரஸ்..!!

ஒரு பிரித்தானியர் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை எதிர்பாராத ஒரு கோணத்தில் கொரோனா வைரஸ் பரவும் தகவல் வெளியாகி மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த அந்த மர்ம நபர், Brightonஇலுள்ள இரண்டு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

மோசமான விடயம், அந்த மருத்துவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது. இந்த விடயம் தெரியவந்ததையடுத்து, அந்த மருத்துவர்கள் பணியாற்றிய மருத்துவமனைகள் மூடி சீல் வைக்கப்பட்டு கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், இதில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், அந்த பிரித்தானியரிடமிருந்து இந்த மருத்துவர்களுக்கு நோய் பரவியதுபோல, இந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியது என்பது தெரியவில்லை.

ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எளிதில் கொரோனா நோய்க்கு ஆளாகிவிடும் அபாயம் உள்ளது.

எனவே, அந்த மருத்துவர்கள் இருவரிடமும் சிகிச்சை பெற்ற சுமார் 15 நோயாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஏனென்றால், அந்த 15 பேர் பிரித்தானியாவில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றைக் கொடுக்கப்போகிறார்கள் என்பது தெரியாது.

இதனால் பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.