5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் நடவுள்ள இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவும், நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள வங்கதேசம் உற்சாகத்துடன் களம் காண்கிறது. இந்த போட்டி இன்று பிற்பகல் ஒன்றரை மணி அளவில் தொடங்க உள்ளது.