மாஸ்டர் 3 லுக் போஸ்டரை பார்த்து விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி என்ன தெரியுமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பாக இதுவரை 3 போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அவை மூன்றுமே விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக கடைசியாக வெளியான 2 போஸ்டர்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. 3வது லுக் போஸ்டரில் விஜயும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக கத்திக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த போஸ்டர்களை வடிவமைத்தவர் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் குறியிருப்பதாவது:

தற்போது ஒரு படத்தின் போஸ்டரிலிருந்தே புரமோஷன் துவங்குகிறது. ஒரு திரைப்பபடத்தின் மீது அதுவே எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டி விடுகிறது. மாஸ்டர் படத்தின் போஸ்டர்களை அப்படித்தான் உருவாக்கினோம். இதை பார்த்த விஜய் ‘இப்படி அவுட்புட் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. இப்டிலாம் கூட யோசிக்க முடியுமா.?. எப்படி ஐடியா புடிச்சீங்க?’ எனக்கேட்டார்’ என தெரிவித்துள்ளார்.