பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னிலியோன்……..

ற்போது, பாலிவுட் படங்களில் நடித்துவரும் சன்னி லியோன் ” நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்திற்கு எதிரானது தான்” என்று அவரே கூறியிருப்பது தற்போது பேசபட்டு வருகிறது.

பாலிவுட் மூலம் இந்திய திரையிலகில், நடிகையாக அறிமுகமானார். இவரது கணவர் டேனியல் வெபர். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னி, வாடகைத்தாய் மூலம் பெற்ற ஆசேர் மற்றும் நோவா சிங் என்னும் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், நான் செய்யும் பல விஷயங்கள் சமூக வழக்கத்திற்கு எதிரானவை என்று எனக்கு நன்றாக தெரியும்.அதில் ஏதாவதுநோக்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் செய்வது அப்படித்தான் உள்ளது என்று நம்புகிறேன்.

எனவே, அது பற்றி கவலைப்படாமல் எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் எது நல்லது என்று நினைக்கிறேனோ அதையே இப்போதுவரை செய்து வருகிறேன்.

ஒருவரை பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது..! ஆனால், அவர் இப்படித்தான் என நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். இது, அவர்களை நம்மிடம் இருந்து தள்ளி வைக்கிறது, என்று கூறியிருக்கிறார்.