இன்று தை அமாவாசை என்ன செய்ய வேண்டும்?

2020 ஆம் ஆண்டு பிறந்து முதல் மாதமான தை மாதத்தில் வரும் தை அமாவாசை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டில் மூன்று அமாவாசைகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அது தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். இந்த 3 அமாவாசைகளின் போதும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாகும்.

இன்று தை அமாவாசை என்ன செய்ய வேண்டும்?

நம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நீர்நிலைகள் பகுதியில் தான் இதை செய்வது வழக்கம். நகரங்களில் இருப்போர் கோயில் குளங்களுக்குச் சென்று இந்நாளில் தர்ப்பணம் கொடுக்கலாம். அதேபோல் அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையல் போட்டு வழிபடுவது நல்லது.

நம் முன்னோர்களை வழிபடுவது என்பது நம் குடும்பத்தை நல்லமுறையில் வாழவைக்க வழிவகுக்கும். அவர்களின் ஆசி கிடைத்தால் நமக்கு சகல நன்மைகளும் கிட்டும். குறிப்பாக நாம் படையலிட்டு காகத்திற்கு வைக்கும் போது, சனிபகவானின் வாகனமான காகம் அதை உண்ணுகிறது. அப்போது சனிபகவான் வழிபாடு என்பது இதில் பூர்த்தியாகும். அதேசமயம் சனி பகவானுக்கு அதிபதி எம தர்மன். அதனால் காகம் உணவை உண்பதால் எம் லோகத்தில் உள்ள நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பதும் முன்னோர்களின் கூற்றாகும்.