அசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்!

மீன் பிடிக்க சென்ற 16 வயது சிறுவன் ஒருவனை 60 கிலோமீட்டர் வேகத்தில் மீன் ஒன்று பாய்ந்து வந்து கழுத்தில் குத்திய சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர்16 வயது சிறுவன் முகமது இதுல். அந்த சிறுவன் தனது பெற்றோருடன் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் சிறுவன் மீது ஒரு மீன் கழுந்த்தில் பாய்ந்துள்ளது.

அதில், மீனின் வாய் ஊசி போல் கூர்மையாக இருந்ததால், மீன் சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுவனின் பெற்றோர் பதறிபோய் உள்ளனர்.

இந்த மீன் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடிய தன்மை கொண்டதாம். அவ்வாறு அந்த மீன் பாய்ந்தபோது, அதன் வாய் முகமதின் கழுத்தில் குத்தி, கழுத்தைத் துளைத்துக்கொண்டு மறுபக்கம் வெளியே வந்தது.

இதனிடையே சிறுவனை உடனடியாக அவனது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றினார்கள்.

மேலும், கழுத்தில் மிக முக்கியமான இரத்தக்குழாய் ஒன்று செல்வதால் அதை சேதப்படுத்திவிடாமல் அந்த மீனை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. மீன் அகற்றப்பட்டாலும், தொடர்ந்து முகமதுக்கு காய்ச்சல் இருப்பதால், அவர் மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.