மகன் வயது வாலிபருடன் காதல்!.. வெளியான உண்மை!!

பேஸ்புக் மூலம் காதலித்து வந்த வாலிபர், அப்பெண்ணின் வயது தெரிந்து விலகியதால் கொல்ல முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.

மலேசியாவை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது 45), பேஸ்புக்கில் பல பெயர்களில் வலம் வந்த விக்னேஸ்வரிக்கும், தேனியை சேர்ந்த அசோக்குமார் (வயது 20) என்ற வாலிபருக்கும் நட்பு மலர்ந்தது.

நாளடைவில் இது காதலாகவும் மாறியது, பின்னர் விக்னேஸ்வரியின் வயது 45 என தெரிந்ததும் அசோக்குமார் விலகியுள்ளார்.

ஆனாலும் விக்னேஸ்வரி தொடர்ந்து அவரை தொந்தரவு செய்து வந்ததுடன் கூலிப்படையை ஏவி கொலை செய்யவும் திட்டமிட்டார்.

இதன்படி அன்பரசன், முனியசாமி, அய்யனார், திருமுருகன் உட்பட ஏழு பேரை ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் சந்தேகம்படும் படியாக போடியில் தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்களை பொலிசார் கைது செய்தனர்.

இதன்பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அசோக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது கண்டறியப்பட்டது.

அத்துடன் குட்டி என்ற சோணைமுத்து கூலிப்படைக்கும் பணம் கொடுத்ததும் தெரியவந்தது, இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் மலேசிய தூதரகம் மூலம் விக்னேஸ்வரியை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.