இந்த மூன்று விஷயங்கள் இருந்தாலே போதும் என்னை காதலிக்க.. பிரபல நடிகை…..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் ஸ்ரீங்காரம் என்ற சிறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை அதிதி ராவ். இவர் தற்போ பாலிவுட் மொழிகளில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். பின் முன்னணி இயக்குநரான மணிரத்னத்தின் படங்களில் நடித்தவர்.

தற்போது மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் பொண்ணியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அதிதிராவ், சில முக்கிய விடயங்களை கூறியுள்ளார். உங்களை கவர்வதற்கு எந்த மூன்று காரணங்கள் வேண்டும் என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அதிதி, நகைச்சுவையானவராகவும், இசையை பிடித்தவர்களாகவும், பிறரை மதிப்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.