இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாம்வே அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

அவ்வணி சார்பாக மஸ்வாவுரே 55 ஓட்டங்களையும் கசுஸா 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். அத்தோடு எர்வின் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் எம்புல்தெனிய மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.