மீண்டும் வில்லனாக அரவிந்சாமி…..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிம்பு, இவர் நடிப்பில் இறுதியாக வெளியான வந்தாராஜாவாதான்வருவேன் திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சிம்பு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்பு பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் மாநாடு, இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குனர் சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.மேலும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு நடிகர் அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். ஒருவேளை அரவிந்தசாமி மாநாடு திரைப்படத்தில் நடித்தால் அவர் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் மாநாடு இருக்கும். சிம்பு மற்றும் அரவிந்த்சாமி ஏற்கனவே செக்கசிவந்தவானம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் அரவிந்த்சாமி பொருத்தவரை தமிழ் சினிமாவில் அவர் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும் வில்லனாக நடித்த தனி ஒருவன் திரைப்படம் அரவிந்த் சாமிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் அரவிந்த்சாமி தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் ,தலைவி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமி எம்ஜிஆரின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆரை போலவே உடல்மொழியில் நடனமாடிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.