வனஜீவராசிகள் அமைச்சர் பயணம் செய்த சொகுசு வாகனம் மோதி ஒருவர் பலி!

வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பயணித்த ​சொகுசு வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்து இருவர் காயமடைந்துள்ளனர்.

​நேற்று (16) இரவு 7.35 மணியளவில் புத்தளம்- திரு​கோணமலை வீதியின் ரன்பத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவியும் குழந்தையும் படுகாயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பி.ரஞ்சன் குமார (35) என்பவரே உயிரிழந்துள்ளார். கஹடகஸ்திகிலிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.