நிறம் மாறாத பூக்கள் சீரியல் நடிகருக்கு இப்படி ஒரு சோகமா?

சீரியல்கள் நடிக்கும் பிரபலங்கள் பலருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அப்படி சமீபத்தில் ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, ஈஸ்வர் பிரபலங்களின் பிரச்சனை பேசப்பட்டது.

தற்போது அவர்களின் விஷயம் மறைந்துபோக புது பிரச்சனை ஒன்று வந்தது. அதாவது பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், நிறம் மாறாத பூக்கள் என சீரியல்களில் முக்கிய நாயகனாக நடித்த அசீம் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் என்றனர்.

பின் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. அசீம் தனது இன்ஸ்டாவில் தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாவில் ஷேர் செய்தார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சமீபத்தில் என்னை பற்றி ஒரு வதந்தி வந்தது, அது எனக்கு அதிக மன உளைச்சலை தந்தது, இப்போது அதை பற்றி பேச விரும்பவில்லை.

என்னுடைய சொந்த விஷயம் அது, இப்போதைக்கு என் மகன் தான் என் உலகம் என பேட்டி கொடுத்துள்ளார்.