தனுஷின் பொல்லாதவன் ஹிந்தி ரீமேக்கில் பிக்பாஸ் பிரபலம்

தனுஷ் திரைப்பயணத்தில் நிறைய முக்கியமான படங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிகம், தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறதாம்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடித்துள்ளதாக தெரிகிறது.

அவர் டுவிட்டரில் இப்பட போஸ்டரை பதிவு செய்து வரும் பிப்ரவரி 28ம் தேதி வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.