சீரியல், சினிமா பிரபலம் ராதிகாவுக்காக ஒன்று திரண்ட நடிகர், நடிகைகள்!

நடிகை ராதிகா 80, 90 களில் முக்கிய ஹீரோயினாக இருந்தவர். கிழக்கே போகும் ரயில் இவரின் முதல் படம். டாப் ஹீரோகளுடன் நடித்து வலம் வந்து தன் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.

இவரின் முகத்தை சினிமாவுக்கு காட்டிய பெருமை இயக்குனர் பாரதி ராஜாவையே சேரும். இதையும் தாண்டி சின்னத்திரை சீரியலில் ஒரு வலம் வந்து புது பரிமாணத்தை உண்டாக்கினார்.

தற்போது தொலைக்காட்சியில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அறிவு சார்ந்த இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்நிகழ்ச்சியில் வரலட்சுமி, ராதா, பூர்ணிமா, பாக்யராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.