ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் மசாஜ் நிலையதில் பெண்கள் இருவரை கடத்திச்சென்ற மூவர் கைது!

ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில் வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தெரிவித்து பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு வலான குற்றத்தடுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.