வெள்ளை வாகன ஊடகச் சந்திப்பு விவகாரத்தில் ராஜிதவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

வெள்ளை வாகன ஊடகச் சந்திப்பு விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை முன்னிலையாகும்படி கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.

ராஜிதவிற்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமா அதிபர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான வழக்கில் இந்த தீர்ப்புவழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன அடுத்த தவணையில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ராஜித சேனரத்னவை பிணையில் விடுக்க டிசம்பர் 30 ம் திகதி விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறைபாடுடையது என்று கூறி சட்டமா அதிபர் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவை பிணையில் விடுவித்த உத்தரவில் திருத்தம் செய்ய கோரப்பட்டுள்ளது.