பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் விடுத்துள்ள வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தனது மகனை விரைந்து விடுதலை செய்யுமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பரோல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், பேரறிவாளன் இன்று மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கும் கணவருக்கும் 70இற்கும் மேல் வயதான நிலையில், தனது மகனுடன் கொஞ்சக் காலம் வாழ வேண்டும் தாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகன் சிறைக்குச் சென்று 29 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகனுடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு எனது மகனை விரைந்து விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். மேலும் இந்த வருடம் பொங்கலுக்கு மகனுடன் இருக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தமக்கு கிடைக்கவில்லை அவர் கவலை வெளியிட்டுள்ளார்.