பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீளவும் சிறை சென்றார் பேரறிவாளன்

தந்தையாருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பிணையில் வெளிவந்த பேரறிவாளன் இன்றையதினம் மீளவும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலம் மோசமடைந்ததாலும், சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் பிணை வழங்க வேண்டும் என அண்மையில் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கடந்த நவம்பர் 12ஆம் திகதி தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பிணை வழங்கியது.

ஒருமாத பிணைக் காலம் முடிவடையும் நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை மோசமானதால், பிணைக் காலம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு மாத பிணை இன்றுடன் முடிந்தது. இதனால் வேலூர் மாவட்டம் ஆயதப்படை டிஎஸ்பி விநாயகம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பலத்த பாதுகாப்போடு பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.