கொடிகாமத்தில் காவலிகள் செயலுக்கு பதிலடி கொடுத்த இளைஞர்கள்!

கொடிகாமத்தில் விஷமிகளின் செயலுக்கு இளைஞர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

கொடிகாமத்தில் அண்மையில் வரையப்பட்ட சுவரோவியங்களில் ஒன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் கழிவு ஓயில் ஊற்றப்பட்டிருந்தது.

இந்த விசமத்தனமான செயற்பாடு நேற்று (11) இரவுவேளை இடம்பெற்றிருந்தது.

நாட்டை அழகுபடுத்துவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளால் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டான, தமிழர் பாரம்பரியங்கள் மற்றும் சமய பாரம்பரியங்கள் தொடர்பான சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அவ்வாறாகவே யாழ் கொடிகாமம் பகுதியிலும் சுவரோவியங்கள் வரையப்பட்டிருந்தன. அந்த சுவரோவியங்களுக்கே நேற்று இரவு வேளை விசமிகள் கழிவு ஓயில் ஊற்றி நாசம் செய்திருந்தனர்.

ஆனால் அப்பகுதி இளைஞர்கள் சற்றும் தளராது, விஷமிகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்று (12) அந்த சுவரோவியத்தை மீண்டு வரைந்துள்ளனர்.

இந்த விஷமத்தனமான செயற்பாடு தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.