காசிம் சோலெய்மனினால் இலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள்! ட்ரம்புக்கு கிடைத்த இரகசியத் தகவல்

ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சோலெய்மனியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது.

இதனையடுத்து ஈரான், அமெரிக்க நிலைகள் மீது ஈராக்கில் தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், காசிம் சோலெய்மனியை கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி சில காரணங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “காசிம் சோலெய்மனி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இதுதவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்கத் தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதித் திட்டம் தீட்டியிருந்தார்.

இதுபற்றிய உளவுத் தகவல்கள் கிடைத்த பின்னர் அவரைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தேன்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ஈரானிய ஆட்சியில் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படுவதாக அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் (Steven) Munichin கூறினார்.

இந்தத் தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்கத் தொழில்களை பாதிக்கும்” என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.