அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்த மாணவிகளின் மரணச் செய்தி கேட்டு உயிர்விட்ட அத்தை!

அஸர்பைஜானின் தொடர்மாடி குடியிருப்பொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய தீவிபத்தில் தமூன்று இலங்கை மாணவியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அஸர்பைஜானின் தலைநகரான பகுவில் (Baku) அமைந்துள்ள கெஸ்பியன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவியர் மூவரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடுவலை மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 21, 23 மற்றும் 25 வயதுகளையுடையவர்கள்.

அவர்கள் தங்கியிருந்த தொடர் மாடியின் கீழ் தளத்தில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ பரவலையடுத்து, நச்சு புகையை சுவாசித்ததன் விளைவாகவே இவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக சபாலி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் நச்சு புகையை சுவாசித்ததன் விளைவாக உடனடியாக வைத்தியசாலைக்குஅழைத்து செல்லப்பட்டுள்ள போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்நிலையில் அவர்கள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு எடுத்து வருவது தொடர்பில் அஸர்பைஜான் அரசுடன் பேசிவருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அஸர்பைஜானில் இலங்கை தூதரகம் இல்லாத நிலையில், ஈரானின் – தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக இந்நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். அஸர்பைஜான் தகவல்களின் பிரகாரம் குறித்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான பட்டப் படிப்பை முன்னெடுத்து வந்த பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரிகளான அமாயா (23), மாலனி (21), கடுவலை பகுதியைச் சேர்ந்த துஷி ஜயகொடி (25) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதில் அமாயா, மாலனி ஆகியோர் சகோதரிகள். இருவரும் கடந்த 2019 ஜூலை 16 ஆம் திகதியே அஸர்பைஜானிக்கு சென்றுள்ளதாகவும், உயிரிழந்த மூன்று மாணவிகளும் குறித்த தொடர்மாடியில் கடந்த இரு மாதங்களாகவே தங்கியிருந்துள்ளதாகவும், தீ பரவல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சபாலி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த தொடர்மாடியில் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ பரவலால் மேல் மாடியில் இருந்த இந்த மூன்று மாணவியரும் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், நச்சு புகையை சுவாசித்தன் விளைவாக சிகிச்சைப் பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்துள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த சகோதரிகளின் தந்தையின் சகோதரி (அத்தை) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.