அதிகமாக நிலக்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

நிலக்கடலையில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இதற்காக, தொடர்ந்து நிலக்கடலையை எடுப்பதும் ஆபத்தானது.

எதையும் அளவாக சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இனி நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.

நன்மைகள்
 • வேர்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.
 • கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.
 • பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.
 • வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.
 • மூளை நன்றாக வேலை செய்ய வேர்கடலை மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.
 • வேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.
 • வேர்கடலை புற்றுநோய் வராமல் தடுக்கவும், இருதயத்தை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்கவும் இது உதவுகிறது.
தீமைகள்
 • அளவில்லாமல் நிறைய நிலக்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
 • நிறைய கடலையை சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக்கொண்டால் சத்துக்குறைபாடு ஏற்படும்.
 • உடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.
 • நிலக்கடலையில் அதிகப்படியான லெக்டீன் இருக்கிறது. இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது. மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரியாமல் அடைத்துக் கொண்டு விடும் இதனால் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.