விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து கோப்பைகளையும் வெல்லும் : பிரையன் லாரா

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வெல்லும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பிரையன் லாரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  விராட் கோலி தலைமையில் தற்போதுள்ள இந்திய அணி  பலமாக உள்ளது என்றார்.
ஐசிசி நடத்தும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெல்லும் திறன் படைத்துள்ளதாக அவர் கூறினார். எந்த போட்டி தொடரிலும் முக்கிய ஆட்டங்களில் இந்தியாவை எதிர்த்து விளையாட வேண்டியதிருக்கும் என்பதை ஒவ்வொரு அணியும் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டெஸ்டில் தமது 400 ரன் சாதனையை டேவிட் வார்னர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முறியடிக்க வாய்ப்பு உள்ளததாக லாரா தெரிவித்தார்.