பிரித்தானியாவின் மிகப் பெரிய லொட்டரி வெற்றியாளர் கோலின் வெயர் மரணம்! எத்தனை மில்லியன் விழுந்திருந்தது தெரியுமா?

பிரித்தானியாவின் மிகப் பெரிய லொட்டரி வெற்றியாளரான கோலின் வெயர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துவிட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த யூரோ மில்லியன் லொட்டரி குலுக்கலில் கோலின் வெயர் 161 மில்லியன் பவுண்ட்(தற்போதைய இலங்கை மதிப்பு 38,22,40,42,621 கோடி ரூபாய்) வென்றார்.

நாட்டின் மிகப் பெரிய லொட்டரி வெற்றியாளர்களில் ஒருவரான இவர் தன்னுடைய 71 வயதில் இன்று உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவருடைய வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆழ்ந்த சோகத்தோடு ஒரு குறுகிய நோய் தாக்கத்திற்கு பிறகு இன்று கோலின் வெயர் காலமானார். இந்த துன்பகரமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் உள்ளனர்.

இதை தவிர தற்போதைக்கு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார். கோலின் வெயர் தன்னுடைய மனைவி கிறிஸை விவாகாரத்து செய்துவிட்டதாகவும், அவரை விவாகரத்து செய்த சில மாதங்களிலே உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.