வடக்கு மக்களுக்கு விசா வழங்கும் சுவிஸர்லாந்து!

இலங்கை பிரஜைகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுவிஸர்லாந்து தூதரகம் அறிவித்துள்ள போதிலும் வடக்கில் வாழும் இலங்கையர்கள் பலருக்கு விசா வழங்கியுள்ளதாக சிங்களே அபி தேசிய அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுவிஸர்லாந்து தூதரகம் நேற்று அறிவித்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் அரசியல் தஞ்சம் கோரிய 642 பேருக்கு சுவிஸர்லாந்து செல்ல அந்த தூதரகம் விசா வழங்கியுள்ளது.

இது சம்பந்தமான தகவல் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. தூதரகம் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவும் இல்லை. சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் தஞ்சம் கோரும் பிரிவில் 2 ஆயிரத்து 408 விண்ணப்பங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களுக்கு அமைய அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் 95 வீதமானவர்கள் வடபகுதியை சேர்ந்த தமிழர்கள் எனவும் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.