பிரசவத்திற்கு ஆம்புலன்ஸ் வராததால் தூக்கிச்சென்ற கணவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். இதற்கு அரசிடமும் எந்தவொரு உதவியும் இல்லாமல் இருக்கும் கிராமங்களில் மக்கள் பல மைல் தூரம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மருத்துவ ஆம்புலன்ஸ் கூட வழங்காத அரசினால் பலர் பாதிக்கும் வீடியோக்கள் வந்து வைராலாகி பேசப்பட்டது.

இதைதொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சாலைகள் மோசமாக இருப்பதால் அங்கு ஆம்புலன்ஸ் சேவை நிராகரித்துள்ளனர். இதனால் கர்ப்பினி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க அவரது கணவரும் உறவினர்களும் மூங்கில் கொம்பில் புடவையை கட்டி தூக்கிச் சென்றுள்ளனர்.

பின் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு அப்பெண்ற்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இப்படியாக மருத்துவ சேவையே இல்லாமல் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருப்பதை பலர் அந்த வீடியோவை பார்த்து திட்டி வருகிறார்கள்.