தமிழக அமைச்சர் வீட்டில் திடீர் மரணம்!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அமைச்சர் சீனிவாசனின் மூத்த மகன் ராஜ்மோகன் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசிக்கிறார். அரசியலில் இருக்கும் ராஜ்மோகன் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும் இருந்து வருகிறார்.

ராஜ்மோகனின் மனைவி விமலாதேவி மரணம் தான் அவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விமலா தேவி கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று (03.12.2019) இரவு மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு செல்ல, சிகிச்சை பலனின்றி விமலாதேவி இறந்தார்.

இந்த தகவல் அமைச்சர் சீனிவாசனுக்கு தெரிவிக்கப்பட, மருமகள் மறைந்ததை கேட்ட அவர், மனம் வெதும்பி கண்கலங்கி அழுதார். மகனுக்கும், பேரன்களுக்கும் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார். விமலாதேவி மறைவை தொடர்ந்து உறவினர்களும், கட்சிக்காரர்களும், பிற கட்சியினரும், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களும் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம். காலனியில் இருக்கும் ராஜ்மோகன் இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.