சாலை விபத்தில் இறந்த மகன்…!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கின்றது. ஆனாலும், வாகன ஓட்டிகளே அதை சரியாக பின்பற்றி  உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மஹேந்திரா தீக்ஷித் என்பவருக்கு தாமோஹ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மிகவும் செல்லமாக வளர்ந்துள்ளார். கடந்த மாதம் 20 ஆம் தேதி தேஜ்கார் பகுதியில் தாமோஹ்க்கு விபத்து நடந்துள்ளது. இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

செல்ல மகனின் மரணம் மஹேந்திரா மனதை மிகவும் பாதித்து இருக்கின்றது. இதுபோல இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணிய மஹேந்திரா தீக்ஷித் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகத் தலைக்கவசம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இதுகுறித்து அவர், “என் மகன் விபத்தில் மரணமடைந்தான். அவன் இறந்து 10 நாட்கள் தான் ஆகிறது. தலைக்கவசம் அணிந்து சென்றிருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம். என் மகனை போல வேறு யாருக்கும் இனி நடக்க கூடாது. எனவே தான் நான் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.