கோடிகளுக்கு விலை பேசும் தயாரிப்பாளர்கள்.. உதறித்தள்ளும் நடிகை..!!

தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் பிரபலமானவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். சிறு படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் பிரபலமானது இந்த படத்தில் தான்.

தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால சிறு நடிகர்கள் படத்தில் நடிக்க தயங்குகிறார். பல தயாரிப்பாளர்கள் ராசியான நடிகை என்று இவரை கமிட் செய்ய வரும் போது பல காரணங்கள் சொல்லி அனுப்பி விடுகிறார் ரஷ்மிகா.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் பல கோடி சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சிறிய நடிகர்கள் படம் என்றால் எனக்கு மார்க்கெட் குறைந்துவிடும். அதனால் வேண்டாம் என்று உதறித்தள்ளியுள்ளார். இதனால பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.