பொதுமக்கள் முறைப்பாடு செய்ய அலுவலகம் திறப்பு! பிரதமர்.

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் அதை பிரதமரின் பொதுஜன தொடர்புகள் பிரிவில் முறையிடலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன தொடர்புகள் பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (03) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, பொதுமக்களால் முன்வைக்கப்படும் அவர்களின் பிரச்சினைகள் குறித்த அமைச்சுகளுக்கு இந்த பிரிவின் ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் இந்த பிரிவால் கண்காணிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.