தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. சமீபத்தில் தர்பார் படத்தில் இருந்து வெளியான சும்மா கிளி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 140 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டும் 70 கோடியாம். ஆம், இந்த படத்தின் பட்ஜெட்டில் பாதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே சம்பளமாக பெற்றுவிட்டார். 2.0 படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 85 முதல் 90 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். பேட்ட படத்திற்கு சூப்பர் ஸ்டார் 55 முதல் 60 கோடி வரை பெற்று உள்ளார்.

கடைசியாக வெளியான பேட்ட படம் 180 கோடி வசூல் செய்தது. இப்போது வெளியாக உள்ள தர்பார் படம் அதையும் தாண்டி வசூல் வேட்டை நடத்தப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சரி, சூப்பர் ஸ்டாரின் தர்பார் பட சம்பளத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? மேலும், தர்பார் படத்திற்காக உங்களில் எத்தனை பேர் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்..?