கொழும்பு துறைமுகத்தில் 35 தொன் கழிவு தேயிலையை ஈராக்கிற்கு அனுப்ப முயன்ற 6 பேர் கைது!

35 தொன் கழிவு தேயிலையை கொண்ட இரண்டு கொள்கலன்கள் இன்று (3) கொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது.

ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையிலேயே கழிவு தேயிலை கொள்கலன்கள் சிக்கின. இரண்டு கொள்கலன்களும், ஒவ்வொன்றும் 40 அடி நீளமானவை.

கண்டியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றே இவற்றை ஏற்றுமதி செய்ய முயன்றது. கொக்கோ துகள் என குறிப்பிட்டே அவை ஏற்றுமதி செய்யப்படவிருந்தன.

3.5 மில்லியன் மதிப்புள்ள இந்த தேயிலை, 1000 பைகளில் பொதியிடப்பட்டிருந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜெபல் அலி துறைமுகம் வழியாக ஈராக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

சட்டவிரோத ஏற்றுமதி முயற்சியுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.