கொழும்பில் மீதிப் பணம் கேட்ட இளைஞன் மீது தாக்குதல்..!!

கொழும்பில் மீதிப் பணம் கேட்ட இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.கெஸ்பேவ, புறக்கோட்டை பேருந்து நடத்துனரிடம் இளைஞர் ஒருவர் மீதிப்பணம் கேட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பயணி மீதிப் பணம் கேட்டமையினால் கோபமடைந்த நடத்துனர், அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நடத்துனரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.நடத்துனரின் தாக்குதலில் இருந்து இளைஞனை பயணிகள் காப்பாற்றியுள்ள நிலையில் அவர் பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.பின்னர் நடத்துனர் மீது கடும் கோபமடைந்த பயணிகள் அவரை கடுமையாக திட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதனால் பேருந்துக்குள் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.