கிளநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 181 பேர் பாதிப்பு

தொடர் மழை காரணமாக கிளநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி பரந்தன், தர்மபுரம், கட்டைக்காடு, பிரமந்தனாறு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இவர்களில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் கட்டைக்காடு அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளதாகவும் குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுளு்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் வெள்ள நீர் உட்சென்றுள்ளது. தொடர்நும் அப்பகுதியல் சில இடங்களில் வெள்ள நீர் தங்கியுள்ளது. அப்பகுதி மக்களில் சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அங்கு ஏற்பட்ட வெள்ள காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்ககை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் வீட்டு வளர்ப்பு கோழிகள் சிலவும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.