தேவாலயத்தில் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்

இந்த உலகத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தந்த நாட்டின் அரசு தங்களது மக்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க பெரும் சவாலை எதிர்நோக்கி மக்களை காத்துகொண்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில்., பர்கினோ நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் இருக்கும் கண்டோகூர்வோரோ நகரில் இருக்கும் கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இந்த தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும்., இந்த தாக்குதலை அரங்கேற்றிவிட்டு அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீதும் நடத்திய துப்பாகி சூட்டில் 3 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எவ்விதமான பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.