தர்பார் திரைப்படத்திற்கு மறுப்பு தெரிவித்த நடிகர்..!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் அதிகாரியாக நடித்து வந்தார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில்., இப்படத்திற்கான முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மூன்றுமுகம் மற்றும் பாண்டியன் திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் என்பதால்., ரசிகர்கள் பெரும் எதிர்ப்ப்புடன் காத்திருக்கும் நிலையில்., இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்., நடிகை நயன்தாரா மற்றும் யோகிபாபு., தம்பி ராமையா போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்த நிலையில்., இப்படத்தின் இசையமைப்பு பணியை அனிருத் மேற்கொண்டுள்ள நிலையில்., இப்படத்தின் தயாரிப்பு பணிகளை லைக்கா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில்., தர்பார் திரைப்படத்தில் தெலுங்கு நடிகரான ரக்சத் ஷெட்டி “ஸ்ரீமன் நாராயணா” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்ததால்., தர்பார் படத்தின் வாய்ப்பு வந்த நேரத்தில் மறுப்பு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும்., இவர் நடித்துக்கொண்டு வரும் ஸ்ரீமன் நாராயணன் திரைப்படம் பெரிய பொருட்செலவில்., தமிழ் மற்றும் தெலுங்கு., மலையாளம்., இந்தி போன்ற மொழிகளில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.