செல்போனில் மூழ்கிய தாய்… ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த குழந்தை!!

குழந்தைகள் விளையாடிக்கொண்டு தானே இருக்கின்றனர் என்று மெத்தனமாக இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆம் சென்னையில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை 2வது மாடியிலிருந்து தவறிவிழுந்து பரிதாப உயிரிழந்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கார்டன் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகீர், மும்தாஜ் தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

சையது அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். நேற்று மதியம் ஒன்றரை வயதான இர்பான் வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் 2வது மாடியின் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இர்பான் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்.

பொலிசார் வழக்கு பதவி செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த நிகழ்வு தாய் செல்போன் பேசிக்கொண்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் பொழுது இவ்வாறு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.