இலங்கை மற்றும் இந்தியா இணைவு!

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையிலான ஏழாவது மித்திர சக்தி கூட்டுப் படை பயிற்சி இன்று புனேயில் ஆரம்பமாகிறது.

இரண்டு வாரகாலம் இந்த இராணுவப் பயிற்சி இடம்பெறவுள்ளது. படைகளிற்கிடையிலான இயங்கு தன்மை, இராணுவ ஒத்துழைப்பு, கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகள், இராணுவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் முறைமை என்பன குறித்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

மித்திர சக்தி கூட்டுப் படை பயிற்சி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இரண்டு நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.