விடிய விடிய அதிகாரியுடன் இளம்பெண் உல்லாசம்… காலையில் கண் விழிக்கையில் ஷாக்!

கோயம்பேட்டில் இருக்கும் பிரபல  ஹோட்டல் ஒன்றில் சென்னையை பூர்வீகமாக கொண்ட முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் பாலியல் தொழில் செய்யும் அழகிய இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக அறை ஒன்றை ஏற்கனவே முன் பதிவு செய்து இருக்கின்றார்.

நேற்று இரவு அந்த இளம்பெண்ணுடன் இரவு முழுவதும் தனிமையில் கழித்து உல்லாசமாக இருந்து இருக்கின்றார். அதன் பின்னர் அந்த முன்னாள் அரசு அதிகாரி அசதியாக உறங்கி இருக்கின்றார். அவர் நன்றாக உறங்கி விடிந்த பின்னர் கண் விழித்து பார்த்துள்ளார்.

அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவர் வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் அந்த பெண் சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் விழி பிதுங்கி உள்ளார்.

அதன் பின்னர், ஓட்டல் நிர்வாகத்திடம் இதுகுறித்து அதிகாரி தெரிவிக்க காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இச்சைக்காக அறிமுகமில்லாத பெண்ணுடன் இணைந்து மொத்தமாய் தொலைத்து விட்ட அதிகாரியை நினைத்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.