பாபரசி கலாச்சாரத்தை கோபத்துடன் திட்டிதீர்க்கும் பிரபல நடிகை..

பெரும்பாலும் பிரபலங்கள் என்றாலே அனைவருக்கும் அவரிடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் தங்களுக்கு பிடித்தமானவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து போகும் அளவிற்கு சிலர் இருப்பார்கள்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை ஊடகங்கள் சூழ்ந்துகொள்ளும். சமீபத்தில் இது பற்றி பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கோபத்துடன் திட்டியுள்ளார்.

பாபரசி கலாச்சாரத்தால் என் மகன் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறான் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாபரசி என்றா ஊடக கலைஞர்கள், புகைப்பட மற்றும் வீடியோ எடுக்கும் கலைஞர்கள் பிரபலங்கள் என்று சென்றாலும் அவர்களை பின் தொடர்வார்கள். அவர்களை தான் நடிகை கரீனா கூறியுள்ளார்.

இதனால் கரீனாவின் மகனுக்கு புகைப்படம் எடுக்கும் ஆடையே போய்விட்டது. இதற்கு காரணம் பாபரசி கலாச்சாரம் தான் என்று பகிரங்கமாக பேட்டியில் கூறியுள்ளார்.