கவுண்டமணியின் தாயாரை சந்தித்த நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும் நடிகர் என்றால் தளபதி விஜய் தான். மேலும், தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வந்தவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி.

இவர் ஒரு காலக்த்தில், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் அந்த அளவிற்கு இவரின் காமெடியை ரசிக்காதவர்களே யாரும் கிடையாது. அதுவும் கவுண்டமணி செந்தில் காமெடி என்றால் போது தற்போது உள்ள மக்கள் வரை இவர்களின் காமெடியை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை.

மேலும், கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன் கருப்பையன். சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக்கொண்டவர்.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஜெயம் ராஜா இயக்கத்தில், வெளிவந்த வேலாயுதம் திரைப்படம் அப்போது பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டது. கவுண்டமணியின் அவர்களின் வீடும் கோயம்புத்தூரில் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து, திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் தான் உள்ளது.

வேலாயும் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு போகும் போது நடிகர் விஜயும், இயக்குனர் ஜெயம் ராஜாவும், கவுண்டமணியின் தாயாரை அவருடைய வீட்டிலேயே சந்தித்து, ஒரு சில காட்சிகளையும் எடுத்ததாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.