கிரிக்கெட் விளையாட்டில் தனது எதிர்காலத்தைப் பற்றி மௌனம் கலைத்தார் டோனி

கிரிக்கெட் விளையாட்டில் தனது எதிர்காலம் குறித்து பல ஊகங்கள் நிலவி வரும் நிலையில் இறுதியாக இந்திய நட்சத்திர வீரர் டோனி மௌனம் கலைத்துள்ளார்.

2019 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து ஓய்வில் சென்ற டோனி தற்போது வரை அணிக்கு திரும்பவில்லை.

அவர் ஓய்வு பெற்றுவார் என பல ஊகங்கள் நிலவி வரும் நிலையில், டோனி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாதது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது.

இந்நிலையில், டோனி தனது எதிர்காலத்தைப் பற்றிய ஊகங்களில் சுவாரஸ்யமான கருத்து ஒன்றை சேர்த்துள்ளார்.

புதன்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டோனியிடம் நிருபர் கேள்வி கேட்டபோது, வெறுமனே ‘ஜனவரி வரை கேட்க வேண்டாம்’ என்று கூறினார்.

ஜனவரி மாதம் என்ன நடக்கப் போகிறது என்பதை டோனி விவரிக்கவில்லை, உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் டோனி தனது எதிர்காலத்தைப் பற்றி பேசுவது இதுவே முதல் முறையாகும்.