சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன்..!

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி அருகேயுள்ள களமருதூர் பகுதியை சார்ந்தவன் அபிஷேக் (வயது 21). இவன் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார்.

இதே பகுதியை சார்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில்., வீட்டில் இருந்த சிறுமியை கடத்தி சென்ற கொடூரன் அபிஷேக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தனது மகளை காணாது பரிதவித்துப்போன பெற்றோர்கள்., பல இடங்களில் தேடியும் பிள்ளையை காணாது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில்., கொடூரனின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., கொடூரன் அபிஷேக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.