அஜித் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளிய கைதி!

கைதி தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கைதி படம் சில வாரங்களுக்கு முன்பே ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, தற்போது இப்படம் ரூ 108 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூலை கைதி பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் பிகில், பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா3யை தொடர்ந்து கைதி 5வது இடத்தை பிடித்துள்ளது.