தினமும் 12 மாத்திரைகளை எடுத்துக் கொண்ட இலியானா ஏன் தெரியுமா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த அனைவரது மனதையும் கவர்ந்தார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை தீவிரமாக காதலித்தார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

காதல் தோல்வியால் மிகுந்த சோகத்தில் இருந்த இலியானா மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மன அழுத்தத்திற்கு சிகிச்சை செய்யும் போது தான் தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் அதனால் தனது உடல் எடை அதிகமாகி விட்டது என்றும் அந்த பேட்டியில் இலியானா குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்று சென்று வருவதாகவும் ஆனால் தான் ஜிம்முக்கு செல்லும் போதும் ஒரு சிலர் தன்னை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதால் ஜிம்முக்கு செல்வதையும் தற்போது நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இலியான நடித்த இந்தி திரைப்படமான ‘பகல்பந்தி’ என்ற திரைப்படம் நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது என்பதும் அவர் மேலும் ‘தி பிக் புல்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.