அக்ஷரா ஹாசனின் புதிய தோற்றம்

மூடர் கூடம் இயக்கத்தில் ‘ நவீன் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் ‘அக்னிச் சிறகுகள்’.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அதேநேரம் விஜய் ஆண்டனியின் தோற்றமும் சமீபத்தில் வெளியானது. சீனு என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து அக்ஷரா ஹாசனின் தோற்றம் குறித்த போஸ்டர் வெளியானது.

சமீபத்தில் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டனர். படத்தில் அக்ஷரா ஹாசன் சில காட்சிகளில் நடித்ததாக செய்திகள் வெளியானது.