ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ‘கண்ணு தங்கம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், Easy come Easy Go என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவா ஆனந்த் எழுத, சித் ஸ்ரீராம், சஞ்சீவ் வு, T, MADM, தபாஸ் நரேஷ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

நடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில், சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இத்திரைப்படம் இயக்குநர் தனா இயக்கத்தில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டோக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 19 ஆவது திரைப்படமாகும்.

முதன்முறையாக மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கின்றார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதியுள்ளனர்.

மணிரத்னத்தின் உதவியாளரான தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்

இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.