யாழில் வீடு திரும்பிய யுவதியை பேருந்துக்குள் வைத்து கற்பழிக்க முயன்ற சாரதியும், நடத்துடனரும்!

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தில் சென்ற யுவதியுடன் சாரதியும், நடத்துடனரும் அத்துமீறி நடக்க முற்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றிரவு 7 மணியளவில் நடந்த சம்பவத்தின்போது, பேருந்தில் இருந்து குதித்து யுவதி தப்பியோடியுள்ளார்.

யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் காரைநகரை சேர்ந்த யுவதியே இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

காரைநகரின் பகுதியொன்றை சேர்ந்த யுவதி, இன்று நகரில் பணி முடித்து தனியார் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இதன்போது, குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் அனைத்து பயணிகளும் இறங்கிவிட, யுவதி மட்டும் வீடு நோக்கி தனித்து பயணித்தார்.

இதன்போது, பேருந்தின் கதவுகளை மூடிவிட்டு, சாரதியும் நடத்துனரும் தன்னுடன் அத்துமீறி நடக்க முயன்றதாக யுவதி முறையிட்டுள்ளார்.

எனினும், கூக்குரலிட்டு, அவர்களிடமிருந்து தப்பித்து, பேருந்திலிருந்து குதித்து தப்பியோடி வந்ததாக வீடு திரும்பிய யுவதி தெரிவித்தார். இது குறித்து வர்த்தக நிலையத்திற்கும் யுவதியின் பெற்றோர் அறிவித்தனர்.

நாளை (21) பொலிஸ் நிலையம், தனியார் போக்குவரத்து சங்கத்திடம் முறையிடவுள்ளதாக அந்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்